நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியின் ஹக்கலை பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் பாதசாரி ஒருவர் பலியாகியுள்ளார்.
சுற்றுலா சென்ற பஸ் ஒன்றில் பிரேக் திடீரென இயங்காமல் போனதால், வீதியோரமாக நடந்து சென்றுகொண்டிருந்த நபர் மீது பஸ் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 46 வயதான நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
