Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழில் வீடுகளில் புகுந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட மூவர் கைது

ஆவணி 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

யாழில் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேகநபர் உட்பட மூவர் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து சுமார் ஒரு கோடியே 75 இலட்சம் ரூபா பெறுமதியான 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 9ஆம் திகதி சாவகச்சேரி நகரில் உள்ள நகைக்கடை உரிமையாளரின் வீட்டில் இருந்து 17 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டமை தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சிசிடிவி காணொளிகளின் உதவியுடன் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில், கல்லுண்டாய் குடியேற்றத் திட்டத்தைச் சேர்ந்த பிரதான சந்தேகநபர் ஒருவர் நேற்று (22) யாழ்ப்பாணம் நகரில் வைத்து கைது செய்யப்பட்டார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில், கோப்பாய் பகுதியைச் சேர்ந்த ஒருவர் மற்றும் ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தொடர்பாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

மேலும், ஊர்காவற்றுறையில் உள்ள வங்கி ஒன்றில் 43 பவுண் தங்க நகைகள் அடகு வைக்கப்பட்டிருந்தமை விசாரணைகளின் போது கண்டறியப்பட்டதுடன், அவை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

திருட்டுச் சம்பவத்திற்கு சந்தேகநபருக்கு உதவியதாகக் கூறப்படும் ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த பெண்ணும் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று சாவகச்சேரி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் செப்டெம்பர் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கசிப்புடன் கைது செய்யப்பட்ட ஆண் ஒருவர்- பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில் உயிரிழப்பு!

வைகாசி 23, 2026
இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

இந்திய மீனவர்கள் 30 பேர் விடுதலை!

ஆனி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மோட்டார் சைக்கிள் “சிசு செரிய” பேருந்துடன் மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு!

ஆடி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெளிநாடுகளில் வாழும் இலங்கை பிரஜைகள் வாக்களிக்க முன்மொழிவுகள்!

ஆனி 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube