Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

24 மணி நேரமும் கண்காணிப்பு – புறக்கோட்டையில் பயணிப்பையை திருடிய நபருக்கு நேர்ந்த கதி

#புறக்கோட்டை #திருட்டு #பயணிப்பை #காவல்துறை #கண்காணிப்பு #குற்றச்செயல் #கொழும்பு #SriLanka #Colombo #Police #CrimeNews #NewsUpdate

ஆவணி 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கொழும்பு புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் பயணி ஒருவரின் பையைத் திருடிய சந்தேகநபர் ஒருவர், அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி (CCTV) கேமராக்கள் மூலம் வான்படை வீரர்களால் உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் நேற்று (23) பயணி ஒருவரின் பை திருடப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள செயல்பாட்டு அறையின் சிசிடிவி கண்காணிப்பு முறைமை மூலம் இத்திருட்டு உடனுக்குடன் கண்டறியப்பட்டது.

அங்கு கடமையில் இருந்த இலங்கை வான்படை வீரர்கள் உடனடியாகச் செயற்பட்டு, சந்தேகநபரை அடையாளங் கண்டு பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ‘தூய்மையான இலங்கை’ திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள இந்த சிசிடிவி கண்காணிப்பு மையம், 24 மணி நேரமும் இயங்கி வருகின்றது.

மேலும், பயணிகளுக்குத் திடீரென ஏற்படும் உடல்நலக் குறைவு, விபத்துகள் அல்லது ஏனைய அவசர உதவிகள் தேவைப்படும் தருணங்களில் விரைந்து செயல்படவும் இந்த செயல்பாட்டு அறை வசதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

ஈரான் தவிர்ந்த ஏனைய நாடுகளின் கப்பல் போக்குவரத்துக்கு ஹோர்முஸ் நீரிணை திறந்திருக்கும் – ட்ரம்ப்

ஆடி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரயில்வே திணைக்களத்தின் இணையதளம் மீது சைபர் தாக்குதல்!

ஆனி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மலையகத்திலுள்ள ஆலயங்கள் இந்து கலாசார திணைக்களத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

ஆவணி 15, 2026
தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

வாட்ஸ்அப்பில் வெளியான புதிய அப்டேட் – இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

புரட்டாதி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube