Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சீன உதவியுடன் டித்வா புயலினால் சேதமடைந்த 14 பாலங்களை மீளகட்டமைக்க தீர்மானம்

ஆவணி 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

டித்வா புயலினால் சேதமடைந்துள்ள 14 பாலங்களை மீள்கட்டமைக்கும் கருத்திட்டத்துக்கு, சீனா நிதி உதவி வழங்க உடன்பாடு தெரிவித்துள்ளதை அடுத்து, அதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கும் அக்கருத்திட்டத்தை முன்னெடுப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி, மேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம், வடமேல் மாகாணம், வடமத்திய மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள 14 பாலங்களை மீள்கட்டமைக்கும் நோக்கில் இக்கருத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டம் இரண்டு கட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளதோடு, முதலாம் கட்டத்தின் கீழ் 18 மாத காலப்பகுதிக்குள் 9 பாலங்களை மீள்கட்டமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முதற்கட்ட மீள்கட்டமைப்புப் பணிகளுக்காக சீனக் குடியரசினால் 79 மில்லியன் ரென்மின்பி நிதியுதவியாக வழங்கப்படவுள்ளது.

அதற்கமைய, இக்கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கும் சீனக் குடியரசுக்கும் இடையில் கையொப்பமிடுவதற்கும், இத்திட்டத்தை இலங்கை அரசாங்கத்தின் திட்டவட்டமான கருத்திட்டமாகப் பிரகடனப்படுத்துவதற்கும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நுவரெலியா – பம்பரகலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர் திருவிழா!

வைகாசி 25, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் மீண்டும் தாக்குதலை ஆரம்பிப்போம் -அமெரிக்கா

வைகாசி 30, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த சுப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!

வைகாசி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தண்டவாளம் இன்றி வீதி வழியாக வந்த புகையிரத எஞ்சின்!

ஆடி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube