சிறிபுர – கலுகெலே குளத்தில் செவ்வாய்க்கிழமை (25) நீராடச்சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீரில் மூழ்கிய நபரை மீட்டு தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதித்த போதும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்தில் எம்பிலிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் சிறிபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
