Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள் நாடு திரும்ப சட்ட தளர்வுகள்

ஆவணி 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள், எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது கைதுகளுக்கோ உள்ளாகாமல் நாட்டின் எந்தவொரு சர்வதேச வானூர்தி நிலையத்தினூடாகவும் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதற்குத் தேவையான சட்டரீதியான தளர்வுகள் செய்யப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோரும் இந்த சந்திப்பில் உடனிருந்தனர்.

யுத்த காலத்தில் முறைசாரா வழிகளில் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் இலங்கையர்கள், பலாலி வானூர்தி நிலையம் ஊடாக நாடு திரும்பியபோது சில கைதுச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.

இதனையடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலையீட்டால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய, உயிரைப் பாதுகாப்பதற்காக முறைசாரா வழிகளில் வெளியேறிய அனைவரும் இப்போது நாட்டின் எந்தவொரு சர்வதேச வானூர்தி நிலையம் ஊடாகவும் அச்சமின்றித் திரும்ப முடியும் என அமைச்சர் விளக்கமளித்தார்.

மேலும், இவ்வாறு நாடு திரும்புவோரை மீள்குடியேற்றம் செய்வதற்கும், அவசியமான காணிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களாகச் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஊடாகத் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்கமைய கடந்த ஜனவரி முதல் 2026 ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் 65 ஏக்கரும், கிளிநொச்சியில் 128 ஏக்கரும், முல்லைத்தீவில் 615 ஏக்கரும், மன்னாரில் 135 ஏக்கருக்கும் அதிகமான காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

7 மாதங்களில் பெருமளவான போதைப்பொருள் சுற்றிவளைப்பு!

ஆடி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

93 சந்தேகநபர்களுக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கை

ஆவணி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹக்கல தாவரவியல் பூங்காவில் தாவரப்பாதுகாப்பு மையம் மற்றும் ஆய்வகம் அமைக்க திட்டம்

ஆவணி 30, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

எல்லையில் லொறி ஆற்றில் கவிழ்ந்து விபத்து; சாரதி படுகாயம்!

ஆவணி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube