நேபாள-திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட பெரும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 270 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் 800-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பகுதிகளில் நிலச்சரிவால் வீதிகள், பாலங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதனாலும், தொடர்ச்சியாக கனமழை பெய்துவருவதாலும் மீட்புப்பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் நேபாள உள்ளூர் ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.
