Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
முக்கியச் செய்திகள்விளையாட்டு

முதல்நாள் ஆட்டத்தில் தடுமாறிய இங்கிலாந்து அணி

ஆகஸ்ட் 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

புகழ்பெற்ற லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய 2 ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில், பாகிஸ்தான் அணியின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இங்கிலாந்து அணி தனது சொந்த மண்ணிலேயே தடுமாறியுள்ளது.

நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

மழை மற்றும் போதிய வெளிச்சமின்மையால் தாமதமாகத் தொடங்கிய போட்டியில், இங்கிலாந்து அணியின் முன்னணி விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்த்தப்பட்டன.

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் அப்பாஸ் (Mohammad Abbas) 15 ஓவர்களில் 56 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

எனினும் இங்கிலாந்து அணியின் ஜோர்டான் காக்ஸ் (55) மற்றும் ஜேமி ஸ்மித் (61) ஆகியோர் தங்களது அரைசதங்களை பூர்த்தி செய்து அணியைச் சரிவிலிருந்து மீட்கப் போராடினர்.

இறுதியில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் மீண்டும் நெருக்கடி அளித்து, இங்கிலாந்தின் கடைசி கட்ட விக்கெட்டுகளைச் வீழ்த்தினர்.

இந்த நிலையில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 56 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 248 ஓட்டங்களை எடுத்துள்ளது.

மோசமான வெளிச்சம் காரணமாக முதல் நாள் ஆட்டம் சற்று முன்னதாகவே நிறைவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பசில் ராஜபக்ஷவைக் கண்டறிய ‘இன்டர்போல் நீல அறிவிப்பு’

செப்டம்பர் 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இன்று சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குனர் சபை கூடுகிறது!

மே 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அறிக்கை!

செப்டம்பர் 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டுபாய் சுத்தாவின் போதைப்பொருள் வலையமைப்பின் 7 பேர் கைது!

மே 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube