Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார் ‘கெஹெல்பத்தர பத்மே’

ஆவணி 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

பாதாள உலகின் முக்கிய புள்ளி என அறியப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையான பூஸா சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

தடுப்புக்காவலில் வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையில், நீதிமன்றத்தால் எதிர்வரும் மாதம் 3 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்போது சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், வெலிசர சிறைச்சாலையில் சந்தேகநபரின் எதிர் தரப்பினர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதால், அவரை பாதுகாப்பு நிமித்தம் வெலிசர தவிர்ந்த வேறு எந்தவொரு சிறைச்சாலையிலாவது தடுத்து வைப்பதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

சட்டத்தரணி முன்வைத்த விடயத்தை பரிசீலித்த நீதிமன்றம், சந்தேகநபரை மிகவும் பாதுகாப்பான பொருத்தமான சிறைச்சாலையொன்றில் தடுத்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு அமைய, சந்தேகநபரை பூஸா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு கொண்டுசென்று தடுத்து வைப்பதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறை மோதல்; துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிக்கு நீதி அமைச்சர் ஆதரவு!

ஆடி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முன்னாள் தென் மாகாண பிரதான செயலாளர் ரன்னுளு சந்திரசிறி டி சொய்சாவுக்கு பிணை

ஆடி 25, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

டிரம்ப் வருகைக்கு முன், ஆயுதத்துடன் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நபர் கைது!

ஆவணி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது

ஆவணி 31, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube