Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தில் 997.84 மில்லியன் ரூபா பெறுமதியான 786 அபிவிருத்தித் திட்டங்கள்

ஆவணி 31, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

அரசாங்கத்தின் “பிரஜா சக்தி” தேசிய வறுமை ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் நுவரெலியா மாவட்டத்தில் 997.84 மில்லியன் ரூபா பெறுமதியான 786 அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னில தலைமையில் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற முனேற்ற மறுஆய்வுக் கூட்டத்தின் போதே இந்தத் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, நுவரெலியா மாவட்டத்தில் 296.19 மில்லியன் ரூபாய் செலவில் 263 வாழ்வாதார அபிவிருத்தித் திட்டங்களும், 543.22 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் 286 உள்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

நாட்டின் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் குறைந்தது ஒரு அபிவிருத்தித் திட்டத்தையாவது நடைமுறைப்படுத்தும் நோக்கில், 2026 ஆம் ஆண்டு பாதீட்டின் ஊடாக “பிரஜா சக்தி” வேலைத்திட்டத்துக்காக அரசாங்கம் 25 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.

இதன்கீழ், நாடு முழுவதும் 8,323 வாழ்வாதார அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் 7,323 உள்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்கள் உட்பட 22.425 பில்லியன் ரூபாய் பெறுமதியான 15,646 திட்டங்கள் இதுவரை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொதுநிதி ஒழுக்கத்தைப் பேணி, பொதுமக்களுக்கு அதிகபட்ச நன்மைகள் கிடைப்பதை உறுதிசெய்து, இந்த அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்துமாறு அமைச்சு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பல மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: பலத்த மழைக்கு வாய்ப்பு

வைகாசி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அமைதியை இழந்த பலாலி மக்கள் வீதிக்கிறங்கி போராட்டம்!

ஆவணி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

ஆவணி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஞானசார தேரரின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு!

ஆனி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube