Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

20 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பொதுச்சுகாதார பரிசோதகர்

புரட்டாதி 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையொன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் அங்கசேட்டையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 51 வயதுடைய பொதுச்சுகாதார பரிசோதகர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான அதிகாரி வாக்குமூலம் வழங்குவதற்காக நேற்று (31) கல்முனைத் தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்தபோதே அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிவான் கே.எல்.எம். சாஜித் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது இரு தரப்பு வாதப்பிரதிவாதங்களையும் செவிமடுத்த நீதிவான், சந்தேகநபரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 03 ஆம் திகதி வரை 3 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கட்டளையிட்டார்.

குறித்த பாடசாலையில் கடந்த 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாணவர்களுக்கான வழக்கமான சுகாதாரப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, பரிசோதனையில் ஈடுபட்ட அதிகாரி தமக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தமது பெற்றோரிடம் முறையிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, பெற்றோர் ஒன்றிணைந்து கையொப்பமிட்ட முறைப்பாட்டுக் கடிதத்தைப் பாடசாலை அதிபர் ஊடாகக் கல்முனைத் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்திருந்தனர்.

அம்மாணவர்களின் முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணைகளையடுத்தே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

நயகரா ஆற்றின் அழிவை தடுக்க புதிய முயற்சி

புரட்டாதி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முச்சக்கர வண்டி மோதியதில் பாதசாரி உயிரிழப்பு!

ஆடி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிகரிக்கும் வாகன திருட்டுச் சம்பவங்கள்

ஆவணி 22, 2026
Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

ஹோமாகம, கட்டுவான தொழிற்சாலையில் ஒன்றில் தீ பரவல்

ஆடி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube