நாட்டின் பல பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, வெப்பமான காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, நாளை (03) பகல் வேளையில், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலையின் வெப்பக் குறியீடு (Heat Index) ‘எச்சரிக்கை’ மட்டம் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நேரம் வெயிலில் இருப்பதும் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் உடல் சோர்வை ஏற்படுத்தக்கூடும் எனவும், தொடர்ந்து இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் வெப்பப் பிடிப்புகள் (Heat Cramps) ஏற்படக்கூடும் எனவும் திணைக்களம் எச்சரித்துள்ளது.
எனவே, போதுமான அளவு நீரை அருந்தி உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளுமாறும், கடுமையான வெளிப்புற நடவடிக்கைகளை மட்டுப்படுத்துமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
