5 வயதுடைய சிறுமியொருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம் சாட்டப்பட்ட 65 வயதுடைய வர்த்தகர் ஒருவர் மாதம்பே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாதம்பே, கருக்குவட்டவ பகுதியைச் சேர்ந்த கடை உரிமையாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிஸ்கட் வாங்குவதற்காக கடைக்கு சென்றிருந்த சிறுமியை, சந்தேகநபர் தனது கடைக்குள் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டை சிறுமியின் தாயார் பதிவு செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவ பரிசோதனைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் (JMO) ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை சிலாபம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மாதம்பே பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
