Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக எயார் வைஸ் மார்ஷல் இந்திக்க விக்ரமசிங்க பொறுப்பேற்பு

புரட்டாதி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக எயார் வைஸ் மார்ஷல் இந்திக்க விக்ரமசிங்க பொறுப்பேற்றுள்ளார்.

ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் (KDU) புதிய உபவேந்தராக எயார் வைஸ் மார்ஷல் இந்திக்க விக்ரமசிங்க புதன்கிழமை (02) பொறுப்பேற்றார். இந்நிகழ்வின்போது அவருக்கு இராணுவ மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது.

கண்டி தர்மராஜ கல்லூரியின் புகழ்பெற்ற முன்னாள் மாணவரான இவர், 1993-ஆம் ஆண்டில் ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் 11 ஆவது மாணவர் குழுவின் மூலம் இலங்கை விமானப்படையில் இணைந்து, 1996-ஆம் ஆண்டில் விமானம் மற்றும் பொதுப் பொறியியல் பிரிவில் பிளைன் ஆஃபீஸ்ர் பதவிநிலையில் நியமிக்கப்பட்டார்.

தனது நீண்டகால சேவையின்போது, இலங்கை விமானப்படையின் விமானப் பொறியியல் பணிப்பாளர் நாயகம் மற்றும் பொதுப் பொறியியல் பணிப்பாளர் நாயகம் ஆகிய பதவிகளை அவர் வகித்துள்ளார். மேலும் அவர் கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியில் வானூர்திப் பொறியியலில் இளங்கலை அறிவியல் பட்டத்தையும், பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் மனிதவள மேலாண்மையில் முதுகலை அறிவியல் பட்டத்தையும், இந்திய விமானப்படை தொழில்நுட்ப கல்லூரியில் வானூர்திப் பொறியியலில் முதுகலை பட்டயத்தையும், இலங்கை தர நிர்ணய நிறுவனத்தில் (SLSI) தர மேலாண்மையில் முதுகலை பட்டயத்தையும் பெற்றுள்ளார்.

அவர் சப்புகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி (DSCSC) மற்றும் இலங்கை தேசிய பாதுகாப்பு கல்லூரி (NDC) ஆகியவற்றில் பட்டதாரியும் ஆவார். அவர் ஐக்கிய இராச்சியத்தின் (UK) பட்டயப் பொறியாளர் மற்றும் ராயல் வானூர்தி சங்கத்தின் உறுப்பினர் தகுதி உட்பட பல உயர் தொழில்முறை தகுதிகளைப் பெற்றுள்ளார். நாட்டிற்கு அவர் ஆற்றிய சிறந்த சேவைக்காக “உத்தம சேவா பதக்கம்” (USP) அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

சிறு தோட்ட உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண தீர்மானம்!

ஆனி 4, 2026
இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

தலைவர் 173 இயக்குனர் அஸ்வத் மாரிமுத்தா?

ஆனி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சொகுசு காரில் சட்டவிரோத மதுபான கடத்தல்

ஆவணி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார் சமல் ராஜபக்‌ஷ

புரட்டாதி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube