Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

ஒரே ஆண்டில் 2 கோடி சிறுவர்கள் இணைய நெருக்கடிகளால் பாதிப்பு!

செப்டம்பர் 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

உலகின் 21 நாடுகளில் இணையத்தைப் பயன்படுத்தும் சுமார் 2 கோடி சிறுவர்கள், ஒரே ஆண்டில் இணையவழி பாலியல் சுரண்டல் அல்லது தவறான நடத்தைக்கு உள்ளாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் ஐந்தில் ஒருவருக்கும் அதிகமானோர் இத்தகைய பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அவர்களில் சுமார் 1.5 கோடி சிறுவர்கள் தங்களது விருப்பத்திற்கு மாறாக பாலியல் ரீதியான அல்லது தவறான உள்ளடக்கங்களை எதிர்கொண்டுள்ளனர். மேலும், சுமார் 90 இலட்சம் சிறுவர்கள் தவறான உரையாடல்கள் அல்லது படங்களைப் பகிருமாறு அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

அத்துடன், சுமார் 40 இலட்சம் சிறுவர்களின் தனிப்பட்ட அல்லது தவறான நிழற்படங்கள் அவர்களின் அனுமதியின்றி பகிரப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதிவாகியுள்ள இத்தகைய சம்பவங்களில் சுமார் 60 சதவீதம் சமூக ஊடகத் தளங்கள் மூலம் இடம்பெற்றுள்ளதாகவும் UNICEF அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிறுவர்களைப் போன்ற தோற்றத்தில் உருவாக்கப்பட்ட தவறான படங்கள் அல்லது காணொளிகளால் சுமார் 11 இலட்சம் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் UNICEF தெரிவித்துள்ளது.

இத்தகைய சம்பவங்களுக்கு உள்ளாகும் சிறுவர்களுக்கு உயிர் மாய்ப்பு அல்லது சுயகாயப்படுத்தல் குறித்த எண்ணங்கள் ஏற்படும் வாய்ப்பு சுமார் நான்கு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை , சிறுவர்களின் இணையப் பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் தவறான உள்ளடக்கங்கள் உள்ளிட்ட புதிய வகையான இணையவழி துஷ்பிரயோகங்களைத் தடுக்கும் வகையில் சட்டங்களை மேம்படுத்த வேண்டும் எனவும் UNICEF வலியுறுத்தியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

மைக்ரோசொப்ட் தனது உலகளாவிய ஊழியர்கள் 4,800 பேரை பணிநீக்கம் செய்ய தீர்மானம்!

ஜூலை 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கோப் குழு முன்னிலையில் ஆஜராக திறைசேரி செயலாளர் மறுப்பு

ஏப்ரல் 29, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

காசாவில் இஸ்ரேலியத் தாக்குதல்கள் – ஐந்து பேர் உயிரிழந்ததாகத் தகவல்

அக்டோபர் 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்கவை சந்தித்த வீட்டு வேலைத் தொழிலாளர் சங்கம் !

ஜூலை 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube