திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் முக்கிய குற்றவாளியான பிரபாத் மதுசங்க என்ற ‘மிதிகம சூட்டி’ என்பவருக்குச் சொந்தமான வீட்டினைப் பயன்படுத்துவதைத் தடை செய்யச் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
வெலிகம, பாத்தேகம பகுதியில் அமைந்துள்ள வீடொன்றே இவ்வாறு பயன்பாட்டிலிருந்து முடக்கப்பட்டுள்ளது.
குறித்த வீடும் காணியும் சுமார் 1.5 கோடி ரூபாய் பெறுமதியானது எனத் தெரிவித்துள்ள பொலிஸார், சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவினரால் அச் சொத்துக்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.
