Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சீன பிரஜை உயிரிழப்பு – மாறுவேடத்தில் இருந்த சீன பிரஜை கைது

புரட்டாதி 5, 2026
படிக்க 2 நிமிடங்கள்

 

கொழும்பு துறைமுக நகரப் பகுதியில் சீன பிரஜையொருவர் கடத்திச் செல்லப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேகநபராகக் கருதப்படும் 54 வயதுடைய சீன பிரஜையொருவர் மாறுவேடத்தில் இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் செயற்கை தலைமுடியை அணிந்து மாறுவேடத்தில் இருந்த நிலையில், சம்பவம் இடம்பெற்று 43 நாட்களுக்குப் பின்னர் கொழும்பு துறைமுக நகரப் பகுதியிலேயே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு சீன பிரஜைகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

எஹலியகொட, கரதன காவல் கண்காணிப்பு நிலைய அதிகாரிகள் குழுவொன்று, கடந்த ஜூலை 23ஆம் திகதி கெட்டஹெத்த பகுதியை நோக்கிய வீதிக்கு அருகிலுள்ள ரம்புட்டான் தோட்டமொன்றில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட வீட்டுக்குள் இருந்து ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

குறித்த சடலம் கற்களால் மூடப்பட்டிருந்ததாகவும், சந்தேகத்திற்கிடமான சொகுசு சிற்றூந்து ஒன்றும் அன்றைய தினம் நுகதண்ட கோவில் அருகிலுள்ள வீதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணைகளில் இது திட்டமிடப்பட்ட சம்பவமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டதுடன், உயிரிழந்தவர் சீன பிரஜை எனவும் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த சீன பிரஜை கொழும்பு துறைமுக நகரப் பகுதியில் இருந்து கடத்திச் செல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் வெளிநாடு செல்லும் நோக்கில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்றிருந்த இரு சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், சம்பவத்துக்குப் பின்னர் சீகிரியா பகுதியில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த மேலும் இரு சீன பிரஜைகள் கடந்த மாதம் 30ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்றைய (04) தினம் கைது செய்யப்பட்ட 54 வயதுடைய பிரதான சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, தடுப்புக்காவல் உத்தரவைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

விமல் வீரவன்ச கைது!

வைகாசி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஓட்டமாவடியில் வீட்டு முன் நிறுத்திய மோட்டார் சைக்கிள் திருட்டு

ஆனி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

அதிகரிக்கும் வெப்பநிலை!

ஆவணி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரம் விசாரணைகளை ஆரம்பித்தது CID

ஆடி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube