Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

நேபாள வெள்ள பெருக்கில் சிக்கிய ஒருவர் 10 நாட்களுக்கு பின்னர் மீட்பு

புரட்டாதி 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நிகழ்ந்த பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவையடுத்து சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த சீன நாட்டைச் சேர்ந்த ஒருவர் 10 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இமாலய பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதி நிகழ்ந்த பனிப்பாறை சரிவு வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவு காரணமாக 1,300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 5,600 க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர்.

இதற்கிடையில், திரிசூலி நதிக்கரையில் அமைந்துள்ள நீர்த்தேக்கச் சுரங்கப்பாதையிலிருந்து சீன நபர் ஒருவர் மீட்கப்பட்டதாக நேபாள இராணுவம் தெரிவித்துள்ளது.

முன்னதாக இதே சுரங்கத்திலிருந்து நேற்று இரண்டு நேபாளிகள் உயிருடன் மீட்கப்பட்டிருந்தனர்.

ஆற்றின் மேல் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதி ஏற்பட்ட பனிப்பாறைச் சரிவு காரணமாக, ஆறு நீர்வழங்கல் திட்டங்களுடன் தொடர்புடைய சுரங்கப்பாதைகளில் குறைந்தது 900 பேர் வரை சிக்கியிருக்கலாம் என மீட்புப் பணியாளர்கள் நம்புகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்

ஈரான் தாக்குதல்கள் தொடர்ந்தால் இஸ்ரேல் தனிமை – டிரம்ப் எச்சரிக்கை!

ஆனி 9, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

வெனிசுவேலா நிலநடுக்கத்தில் 32 பேர் பலி!

ஆனி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

பலத்த காற்று எச்சரிக்கை

ஆடி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடலலையில் இழுத்து செல்லபட்ட இளைஞன் பாதுகாப்பாக மீட்பு!

ஆனி 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube