Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

முன்னாள் அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிரான சாட்சிப்பதிவு ஒக்டோபர் 5க்கு ஒத்திவைப்பு!

புரட்டாதி 8, 2026
படிக்க 2 நிமிடங்கள்

 

ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பில் முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சிபதிவுகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி இடம்பெறும் என கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கு நேற்று திங்கட்கிழமை (7) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷந்த கொடவெல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது முறைப்பாட்டாளர் தரப்பு சார்பில் மன்றில் முன்னிலையான இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் உதவி பணிப்பாளர் நாயகம் அசித அந்தோணியின் நெறிப்படுத்தலில் சாட்ச்சியங்கள் பதிவுசெய்யப்பட்டன.

2014 ஆம் ஆண்டு இலங்கை உர நிறுவனத்தின் ஹூனுபிட்டிய கஞச்சியசாலைக்கான வீதியை காபட் இடுவதுக்கான ஒப்பந்தகாரரை தேரிவு செய்வதுக்கான செயன்முறை ஆரம்பிக்கப்பட்டது. அந்த சந்தரப்பத்தின் போது பிரதிவாதியான குமார ஜயக்கொடியே கொள்முதல் முகாமையாளரால் பணியாற்றினார்.

அதற்கமைய, கொள்முதல் செயன்முறையைப் பின்பற்றி இந்த கார்பட் இடும் பணியை மேற்கொள்வதற்காக ‘டீ.எஸ். கன்ஸ்ட்ரக்ஷன்’ என்ற நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, அந்நிறுவனத்துக்கு முன்பணமாக 8,859,708 ரூபா செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கொள்முதல் பிரிவு மற்றும் நிதிப் பிரிவு என்பன குறித்த கொள்முதல் செயன்முறையைச் சரிவரப் பின்பற்றியுள்ளதாகச் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களைப் பரிசீலித்ததன் பின்னரே, அந்தப் பணத்தைச் செலுத்துவதற்கு அனுமதி வழங்கியிருந்தேன். எவ்வாறாயினும், குறித்த நிறுவனம் கார்பட் இடும் பணியை மேற்கொள்ளவில்லை. அப்பணிக்காகக் கொண்டுவரப்பட்டிருந்த கற்கள் உள்ளிட்ட மூலப்பொருட்களும் நிறுவன வளாகத்திலேயே இடப்பட்டிருந்தன.

அதன் பின்னர், குறித்த நிறுவனத்துக்கு வழங்கிய முன்பணத் தொகையிலிருந்து 2,214,921 ரூபா மாத்திரமே மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டது எனத் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் சட்ட உத்தியோகத்தர் ஒருவரும் சாட்சியமளித்திருந்ததார். இந்நிலையில் இந்த வழக்கின் மேலதிக சாட்சிப்பதிவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.

2014 ஆம் ஆண்டு இலங்கை உர நிறுவனத்தின் கொள்முதல் முகாமையாளராகக் கடமையாற்றிய போது, உர நிறுவனத்தின் களஞ்சிய வளாகத்தில் கார்பட் இடும் ஒப்பந்தத்தை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு நன்மைபயக்கும் வகையில் வழங்கி அரசாங்கத்துக்கு 8,859,708 ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டில் தீவிரமடையும் வறட்சி: வேகமாக வற்றும் பிரதான நீர்த்தேக்கங்கள்!

ஆவணி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மழை பெய்யும்!

வைகாசி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறைச்சாலைகள் அமைதியின்மை தொடர்பில் கலந்துரையாடல்!

ஆவணி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

வைகாசி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube