Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

மெக்சிகோவை “நியூ அமெரிக்கா” என மாற்றிய ட்ரம்ப்

செப்டம்பர் 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத்சோஷியல் சமூக ஊடகப் பக்கத்தில், நியூ மெக்சிகோ மாநிலத்தின் வரைபடத்தில் “மெக்சிகோ” என்ற சொல்லை நீக்கி, அதற்குப் பதிலாக “அமெரிக்கா” எனக் குறிப்பிட்டு “நியூ அமெரிக்கா” என மாற்றி வரைபடம் ஒன்றை அமைத்துப் பதிவிட்டுள்ளார். இந்த வரைபடத்தின் புகைப்படம் வெள்ளை மாளிகையின் உத்தியோகபூர்வ எக்ஸ் கணக்கிலும் பகிரப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தனது பதிவில், “வாக்குப்பதிவு முறைகேடுகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் ஒன்றான நியூ மெக்சிகோவின் பெயரை ‘நியூ அமெரிக்கா’ என மாற்ற வேண்டும் என பலர் பரிந்துரைத்தனர். மக்களுக்கு இது மிகவும் பிரம்மாண்டமாகவும் அழகாகவும் இருக்கும்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப்பின் இந்த யோசனைக்கு நியூ மெக்சிகோ மாநிலத்தின் ஜனநாயகக் கட்சித் தலைவர்களும் ஆளுநர் மிஷெல் லூஜான் கிரிஷாமும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாநில அரசியலமைப்பின்படி, ஜனாதிபதியின் தனிப்பட்ட நிர்வாக உத்தரவால் மாநிலத்தின் பெயரை மாற்ற முடியாது.

2025 ஜனவரியில் இதனை “அமெரிக்க வளைகுடா” என பெயர் மாற்ற உத்தரவிட்டார்.

கனடாவுடனான வர்த்தகப் போருக்கு மத்தியில், எல்லைப் பகுதியான ஒன்டாரியோ ஏரியை “லேக் அமெரிக்கா” என மாற்ற உத்தரவிட்டார்.

அமெரிக்க புவியியல் பெயர்கள் தகவல் அமைப்பின் உத்தியோகபூர்வப் புதுப்பிப்பைத் தொடர்ந்து, கூகுள் மெப்ஸ் மற்றும் ஆப்பிள் மெப்ஸ் ஆகியவை அமெரிக்க பயனர்களுக்கு ‘லேக் அமெரிக்கா’ மற்றும் ‘அமெரிக்க வளைகுடா’ என மாற்றிக் காண்பிக்கின்றன. எனினும், கனடா மற்றும் பிற நாடுகளில் பழைய பெயர்களே காண்பிக்கப்படுகின்றன.

வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ட்ரம்ப்பின் மக்கள் ஆதரவு வீதம் 33 சதவீதமாக குறைந்துள்ள காலகட்டத்தில் இந்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

புளியங்கொட்டை தொண்டையில் சிக்கியதில் 7 வயது சிறுமி ஒருவர் உயிரிழப்பு

செப்டம்பர் 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலஞ்சம் பெற்ற முல்லேரியா பிரதேச சபையின் வருமான பரிசோதகர் கைது

ஜூலை 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அரச பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!

மே 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு

செப்டம்பர் 22, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube