Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

10000க்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்களின் EPF, ETF நிலுவைத்தொகைகளை வழங்க அரசு நடவடிக்கை

புரட்டாதி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

நிலுவையில் உள்ள தோட்ட தொழிலாளர்களின் அரசாங்கத்துக்கு சொந்தமான மூன்று பெருந்தோட்ட நிறுவனங்களில் பணியாற்றும் மற்றும் ஓய்வுபெற்ற 10,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக செலுத்தப்படாமல் இருந்த 4,500 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான ஊழியர் சேமலாப நிதி (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) நிலுவைத் தொகைகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சினால் முன்னெடுக்கப்படும் இந்த நிலுவைத் தொகை வழங்கும் திட்டம் வியாழக்கிழமை (10) கண்டி மாவட்டச் செயலகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ், அரச பெருந்தோட்ட யாக்கத்தின் (SLSPC) சுமார் 3,000 ஊழியர்களுக்கு 1,961 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையும், மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபையின் (JEDB) 6,123 ஊழியர்களுக்கு 2,024 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையும், எல்கடுவ தோட்ட நிறுவனத்தின் சுமார் 1,000 ஊழியர்களுக்கு 503 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையும் வழங்கப்படவுள்ளன.

தோட்டத் தொழிலாளர்கள் ஓய்வுபெற்ற பின்னரும் முதிய வயதிலும் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் சமூகச் சவால்களைக் கருத்தில் கொண்டு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்தியாரத்ன சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் நிதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும், அவர்களின் வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாப்பதுமே இதன் பிரதான நோக்கமாகும் என பெருந்தோட்ட அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று கண்டியில் நடைபெறவுள்ள ஆரம்ப விழாவில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்தியாரத்ன, தொழில் அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ, பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சாகர காரியவசம் கடுவல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை

ஆவணி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொலிஸாரை தாக்கிய வழக்கு – எம்.பி சாமிந்த விஜேசிறிக்கு இன்று தண்டனை!

ஆடி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு கொம்பனித்தெரு ஆலய நகைகள் நன்கொடைகள் மூலம் மீட்பு

ஆவணி 20, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

தென் கொரியா – வட கொரியா போரை முடிவுக்கு கொண்டுவர அழைப்பு

ஆவணி 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube