சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை உரிய காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்கத் தவறியவர்கள், தாமதத்திற்கான நியாயமான காரணங்களை செப்டம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் அறிக்கைகளை சமர்ப்பிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதற்கு முன்னர், தாமதத்திற்கான காரணங்களை ஆணைக்குழுவிடம் தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, உரிய காலத்திற்குள் சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறியவர்கள், செப்டம்பர் 30ஆம் திகதிக்குள் தாமதத்திற்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்களை முன்வைக்குமாறு ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
