பொலன்னறுவை – ஹபரணை பிரதான வீதியின் மின்னேரியா, 7ஆம் கட்டை தேவாலய வளைவுப் பகுதியில் இன்று வியாழக்கிழமை (10) இடம்பெற்ற பஸ் விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மெதிரிகிரியவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்றே வீதியை விட்டு விலகி கால்வாயொன்றில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
பஸ் விபத்தில் காயமடைந்த 22 பேர் ஹபரணை மற்றும் ஹிங்குராங்கொடை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த பகுதி விபத்துகள் அடிக்கடி இடம்பெறும் இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளில் மின்னேரியா பொலிஸார் ஈடுப்பட்டு வருகின்றனர்.
