Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மொரகஹேன பகுதியில் வீடொன்றில் உயிரிழந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

புரட்டாதி 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

மொரகஹேன பகுதியில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை பெறாமல் வீட்டில் இருந்த பெண்ணொருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குடா உடுவ, கரகஹதெனிய பகுதியில் வசித்து வந்த 51 வயதான நிர்மலா பிரசாதி ஏகநாயக்க என்பவரே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணைகளின்படி, மருதானை பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கிய பின்னர், அவர் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

எனினும், குறித்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டிலேயே மத வழிபாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் தனது கணவருடன் வசிக்கவில்லை என்றும், மற்றொரு நபருடன் வசித்து வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த இருவரும் மத வழிபாடுகளை மேற்கொண்டு வந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் சடலத்தை மீட்டபோது, அவர் உயிரிழந்து குறைந்தது இரண்டு நாட்களாகியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதுடன், பிரேதப் பரிசோதனைக்காக சடலம் ஹோமாகம மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரகஹேன பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!

ஆடி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தேநீர் மற்றும் பால் தேநீரின் விலை குறைப்பு

புரட்டாதி 5, 2026
இலங்கைதொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

வாகன சாரதிகளே அவதானம் – விதிமீறல்களுக்கான தண்டப்பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம்!

வைகாசி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நிலச்சரிவு அபாய ஆய்வுக்கான கோரிக்கைகள் 7,779 – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தகவல்!

ஆனி 27, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube