Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்காவில் நிலவும் அதிக வெப்பநிலை

புரட்டாதி 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அமெரிக்காவில் கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகாலப்பகுதி வரலாற்றில் இதுவரை பதிவாகாத உயரிய வெப்பநிலை பதிவாகியுள்ளது. கிட்டத்தட்ட 138 ஆண்டுகளுக்கு பின்னர் இவ்வாறு உயர் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

அமெரிக்க தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் (National Oceanic and Atmospheric Administration – NOAA) தகவலின்படி, நாட்டின் தொடர்ச்சியான 48 மாநிலங்களில் சராசரி வெப்பநிலை 23.6 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளது.

இது 20ஆம் நூற்றாண்டின் சராசரியை விட 1.7 டிகிரி செல்சியஸ் அதிகமாகும். மேலும், கடந்த ஆகஸ்ட் மாதமும் இதுவரை பதிவான மிகவும் வெப்பமான ஆகஸ்ட் மாதமாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, கடும் வெப்பத்துடன் அமெரிக்காவின் பல பகுதிகளில் வறட்சியும் தீவிரமடைந்துள்ளது. செப்டம்பர் முதலாம் திகதி நிலவரப்படி, நாட்டின் சுமார் 59 சதவீதப் பகுதி வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, டெக்சாஸ் மற்றும் ஓக்லஹோமா உள்ளிட்ட பகுதிகளில் ஆகஸ்ட் மாத மழைவீழ்ச்சி வழக்கத்தைவிட 30 சதவீதத்திற்கும் குறைவாகப் பதிவாகியுள்ளது.

காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் உலகளவில் வெப்பம், வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

மேலும், அமெரிக்காவில் செப்டம்பர் மாதத்திலும் பல பகுதிகளில் வழக்கத்தைவிட அதிக வெப்பநிலை நிலவும் என NOAA கணித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நாமல் தலைமையில் புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன் அழைப்பு

ஆவணி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மலையக வீட்டுத் திட்ட முன்னேற்றம் குறித்து கலந்துரையாடல்

ஆனி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உயர் வெப்பநிலையினால் தோல் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரிப்பு!

வைகாசி 7, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

எண்ணெய் விலை வீழ்ச்சி!

ஆடி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube