இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூர் மாவட்டத்தில், ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் பசுவின் பால் மூலம் தயாரிக்கப்பட்ட பிரசாதத்தை உட்கொண்ட சுமார் 450 பேருக்கு முன்னெச்சரிக்கையாக ரேபிஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
துர்கா பூஜையின்போது தாதி காஸ் கிராமத்தில் வழங்கப்பட்ட சரணாமிர்தம் எனப்படும் புனிதப் பிரசாதத்தை இரு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் உட்கொண்டுள்ளனர். குறித்த பிரசாதத்தை தயாரிக்க பால் கறக்கபட்ட பசு உடல்நலக் குறைவுக்குள்ளாகி, அசாதாரணமாக நடந்துகொண்ட பின்னர் உயிரிழந்துள்ளது. அதற்கு நாயொன்று கடித்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, சுகாதாரத் துறையினர் தடுப்பூசி முகாமை ஏற்பாடு செய்துள்ளனர். எனினும், உயிரிழந்த பசுவுக்கு ரபிஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தமை இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
