பிலிப்பைன்ஸில் எம்.வி. ஜூன் அஸ்டர் (MV June Aster) பயணிகள் கப்பலில் திடீரென ஏற்பட்ட தீப்பரவலில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுற்றுலாத் தலமான பலாவான் மாகாணத்தின் கொரான் பகுதிக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்து குறித்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள நாட்டின் கடலோரக் காவல்படை, கப்பலில் பயணம் செய்த 42 பேர் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
எனினும், கப்பலில் பயணம் செய்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட மொத்தம் 134 பேரில், 87 பேர் வரை காணாமல் போயுள்ளதாகக் கடலோரக் காவல்படை தளபதி நோமி கயப்யாப் (Noemi Cayabyab) உள்ளூர் வானொலி நிலையம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவர்களைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
