2023 ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலில் போர் ஆரம்பித்ததில் இருந்து, காஸா பகுதியில் 60,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தங்கள் பெற்றோரில் ஒருவரையாவது இழந்துள்ளதாக காஸாவின் சுகாதார அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குறைந்தது 60,737 சிறுவர்கள் பெற்றோரில் ஒருவரையாவது இழந்துள்ளனர்.
இவர்களில் 52,095 பேர் தங்கள் தந்தையையும், 5,929 பேர் தங்கள் தாயையும், 2,713 பேர் பெற்றோர்கள் இருவரையும் இழந்துள்ளனர்.
மேலும், 8,858 பேரைக் கொண்ட 2,276 குடும்பங்கள் “குடிமக்கள் பதிவேட்டிலிருந்து முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக” அமைச்சு தெரிவித்துள்ளது.
அக்டோபர் 2023 முதல் 73,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்டோபர் மாதத்தில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இஸ்ரேல் காசா முழுவதும் தொடர்ந்து கொடிய தாக்குதல்களை நடத்தி வருவதால், போர் நிறுத்தத்திற்குப் பிறகு 1,100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
