Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

இந்தோனேஷியாவில் 5.9 – 6.5 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு

புரட்டாதி 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று(12அதிகாலை ) 04:23 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இந்த நில அதிர்வானது 5.9 முதல் 6.5 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதுடன், ஆயிரம் தீவுகளுக்குச் தென்கிழக்கே மையம் கொண்டிருந்தது.

பூமியதிர்ச்சியால் சுனாமி பேரலைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை என இந்தோனேசிய வளிமண்டலவியல், காலநிலை மற்றும் புவிப்பௌதிகவியல் முகவாண்மை உறுதிப்படுத்தியுள்ளது.

இச் சம்பவத்தால் இதுவரை உயிரிழப்புகளோ அல்லது கட்டட சேதங்களோ ஏற்பட்டதாக எந்தவித அதிகாரப்பூர்வத் தகவலும் வெளியாகவில்லை.

ஜகார்த்தா, பாந்தென், மேற்கு ஜாவா மற்றும் சுமாத்ராவின் பாலம்பாங், பெங்குலு, லம்பங் உள்ளிட்ட பல பகுதிகளில் பூமியதிர்ச்சியின் அதிர்வுகள் வலுவாக உணரப்பட்டுள்ளன.

தொடர் பூமியதிர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்

ஆனி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தென்னை முக்கோண வலய பயனாளிகளுக்கு காசோலைகள் மற்றும் தென்னம்பிள்ளைகள் வழங்கிவைப்பு!

ஆவணி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காணி உரித்து ஆவணங்கள் இல்லாத மக்களுக்கு உறுதிகள் வழங்கப்படல் வேண்டும்

வைகாசி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

99 கிலோ ஹெரோயின் அழிப்பு!

ஆடி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube