Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

26 நகரங்களை அபிவிருத்தி செய்ய 65 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

புரட்டாதி 13, 2026
படிக்க 2 நிமிடங்கள்

 

இலங்கையிலுள்ள நகரங்களைப் பாதுகாப்பான, மக்களை மையமாகக் கொண்ட மற்றும் நிலையான நகர்ப்புறப் பகுதிகளாக மாற்றி அமைக்கும் நோக்கில், அரசாங்கம் புதிய ‘வாழ்வியல் நகரங்கள்’ அபிவிருத்தித் திட்டத்தை அறிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட யோசனைக்கு அமைவாக உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டத்திற்காக மொத்தம் 65 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் உள்ள 26 நகரங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதுடன், முதற்கட்டமாக 10 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதன்படி மாத்தறை, மட்டக்களப்பு, மாத்தளை, வவுனியா, பதுளை, யாழ்ப்பாணம், சிலாபம், ஹட்டன், தலாவ மற்றும் எஹெலியகொட ஆகிய நகரங்களில் முதற்கட்ட அபிவிருத்திப் பணிகள் தொடங்கப்படவுள்ளன.

அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இத்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, 26 நகரங்களின் அபிவிருத்திக்காக 65 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. தேவையான நிதியை நாங்கள் ஏற்கனவே வழங்கிவிட்டதால், உள்ளுராட்சி மன்றப் பிரதிநிதிகள் நாளை முதலே பணிகளைத் தொடங்க வேண்டும். நகர மேயர்கள் மற்றும் அதிகாரிகளின் வேலை முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டே அடுத்தடுத்த நிதி ஒதுக்கீடுகள் தீர்மானிக்கப்படும் எனத் தெரிவித்தார்.உள்ளூர் சுற்றுலா ஆராய்க

நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இலங்கையின் நகர்ப்புறங்களில் 44.5 சதவீத மக்கள் வாழும் போதிலும், அவை முறையான திட்டமிடல் இன்றியே வளர்ச்சியடைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், நகர்ப்புற அபிவிருத்தி என்பது வெறும் கட்டிடங்களைக் கட்டுவதோடு முடிந்துவிடுவதில்லை. ஒரு நகரம் என்பது வெறும் கான்கிரீட் காடு அல்ல் அது மனிதர்கள் மட்டுமன்றி விலங்குகளுக்கும் பாதுகாப்பு மற்றும் சொந்த உணர்வைத் தர வேண்டும். இத்திட்டத்திற்கான நகரங்கள் வெளிப்படையான புள்ளி வழங்கும் முறைமையின் மூலமே தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதோடு, ஒவ்வொரு நகரத்தின் தனித்துவமும் பாதுகாப்பப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

நிகழ்வின் நிறைவில், முதற்கட்டமாகத் தேர்வான 10 நகரங்களுக்கான திட்ட வரைபடங்கள் அந்தந்த உள்ளுராட்சி மன்றப் பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டன. உள்ளுர் அதிகாரசபைகளின் நேரடிப் பங்களிப்புடன் இத்திட்டம் மிக விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கு : உடல்கள் கிடைக்காததால் மக்கள் கவலை

புரட்டாதி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தொழிலாளர்களின் கட்டாய உழைப்பு இறக்குமதி பொருட்களுக்கு தடை!

ஆடி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரகித உள்ளிட்ட மூவருக்கு பிணை!

ஆடி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அபுதாபியில் இருந்து நாடு கடத்தப்பட்ட இரு சந்தேக நபர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்

புரட்டாதி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube