முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு இன்று (14) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில், முறைப்பாட்டுத் தரப்பு சாட்சிகளிடம், சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டதுடன், பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகளால் குறுக்கு விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், மேலதிக சாட்சியப் பதிவுகள் நவம்பர் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் மணல் அகழ்வு திட்டத்தை தன்னிச்சையாகவும் சட்டவிரோதமான முறையிலும், உரிய கொள்முதல் நடைமுறைகளைப் பின்பற்றாமல் கொரிய நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு வழங்கி அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
