Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

க.பொ.த சாதாரண தர பாடங்களின் எண்ணிக்கை 7 ஆகக் குறைப்பு – பிரதமர்

புரட்டாதி 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

கல்வி மறுசீரமைப்பு தொடர்பான உபகுழுவின் கலந்துரையாடலின் போது, க.பொ.த சாதாரண தர (O/L) பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கையை 7 ஆகக் குறைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 7 பாடங்களுக்குள் வரலாறு (History) மற்றும் அழகியல் (Aesthetics) ஆகிய பாடங்களும் அடங்கும்.

பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் அண்மையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்திலேயே இந்த தகவல் வெளிவந்துள்ளது.

மேலும், 12 மற்றும் 13ஆம் தரங்களுக்கான (A/L) பாடத்திட்டத்தில் ‘சமூக ஒருமைப்பாடு’ (Social Cohesion), ‘சட்டம்’ (Law) மற்றும் ‘நன்னெறி’ (Ethics) ஆகிய புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

2027ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பொதுக் கல்வி மற்றும் முன்பள்ளிக் கல்வி மறுசீரமைப்புகளின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

அதன் முதற்கட்டமாக 2 மற்றும் 6ஆம் தரங்களுக்கான செயற்பாட்டுப் புத்தகங்கள், ஆசிரியர் வழிகாட்டிகள் மற்றும் பாடத் தொகுதிகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதுடன், ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டங்களும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. புதிய கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பான விழிப்புணர்வுத் திட்டங்கள் விரைவில் நாடுமுழுவதும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இவற்றுடன், முன்பள்ளிக் கல்வியை முறைப்படுத்துவதற்காக தேசிய முன்பள்ளிக் கொள்கை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. இதன்கீழ் முன்பள்ளிப் பதிவு, பாடத்திட்டத் தயாரிப்பு, ஆசிரியர் வழிகாட்டல்கள் மற்றும் பயிற்சித் திட்டங்கள் என்பன தற்போது தீவிரமாகச் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

3 நாட்களுக்கு தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டம் ஆரம்பம்!

ஆனி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

திருகோணமயில் குறைந்த விலையில் நெல்கொள்வனவு – விவசாயிகளுக்கு நஷ்டம்

புரட்டாதி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தடைப்பட்டிருந்த நீர் விநியோகம் அடுத்த சிலமணிநேரங்களில் வழமைக்கு திரும்பும்

ஆவணி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டிசம்பர் மாத இறுதிக்குள் CT scanner இயந்திரம் வழங்கப்படும் – நளிந்த ஜயதிஸ்ஸ

ஆடி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube