டைம்ஸ் சதுக்கத்தில் நடந்த தொடர் கத்திக்குத்து சம்பவத்தினை தொடர்ந்து , கத்தியுடன் இருந்த பெண்ணின் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
49 வயதான பமீலா சிஸ்னெரோஸ் (Pamela Cisneros), ஒரு பையிலிருந்து இரண்டு கத்திகளை எடுத்து, சுமார் 20 வினாடிகளுக்குள், 32 வயதான ஒரு பெண்ணையும், 68 வயதான ஒரு ஆணையும் குத்தி கொலைசெய்துள்ளார்.
அதன் பின்னர் குறித்த பெண் தப்பி ஓட முயற்சித்த போது, NYPD அதிகாரிகள் அவரை சுற்றிவளைத்த போது, தன்னிடமிருந்த கத்திகளை காட்டி மிரட்டியுள்ளார். அதிகாரிகள் அவரிடம் கத்திகளைக் கீழே போடுமாறு உத்தரவிட்டபோதும் அவர் மறுத்து, “நான் உங்கள் இருவரையும் கொன்றுவிடுவேன்” என கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது. டேசர் கருவிகள் பலனளிக்காததால், அதிகாரிகள் பெண்ணின் மீது துப்பச்சூடு நடத்தியதில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
கத்தி குத்து மேற்கொண்ட பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
