Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

அஜித்தின் கார் பந்தய ஆவணப்படத்தில் விஜயின் காட்சிகள்?

#அஜித்குமார் #விஜய் #AjithKumar #Vijay #GladiatorsInPursuitOfChallenges #Kollywood #TamilCinema #Motorsports #AjithFans #VijayFans

புரட்டாதி 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அஜித்தின் கார் பந்தய ஆவணப்படத்தில் விஜயின் காட்சிகள்? வெளியான புதிய தகவல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், திரைப்படங்களைத் தாண்டி கார் பந்தயத்திலும் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகிறார். சர்வதேச அளவிலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டிகளில் பங்கேற்று வரும் அஜித்தின் பயணத்தை மையமாக வைத்து, இயக்குநர் ஏ.எல். விஜய் புதிய ஆவணப்படம் ஒன்றை இயக்கியுள்ளார்.

Contents
அஜித்தின் கார் பந்தய ஆவணப்படத்தில் விஜயின் காட்சிகள்? வெளியான புதிய தகவல்ஆவணப்படத்தில் விஜயின் காட்சிகள்?

‘Gladiators in Pursuit of Challenges’ என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி இப்படத்தை தயாரித்துள்ளார்.

இந்த ஆவணப்படத்தின் டிரெய்லர் அண்மையில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றிருந்தது. இதையடுத்து, ஆவணப்படம் எதிர்வரும் நவம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆவணப்படத்தில் விஜயின் காட்சிகள்?

இந்நிலையில், அஜித்தின் ஆவணப்படம் தொடர்பாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற சில்வர்ஸ்டோன் மிச்செலின் லீ மான்ஸ் கார் பந்தயத்துடன் தொடர்புடைய நிகழ்வுகளில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் கலந்துகொண்டிருந்தார். அப்போது அஜித்துடன் விஜய் நேரத்தை செலவிட்டதுடன், ரேஸ் கார் ஓட்டி மகிழ்ந்த காட்சிகளும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தன.

இந்த நிகழ்வுகள் தொடர்பான சில காட்சிகளையும் அஜித்தை மையமாகக் கொண்டுள்ள ‘Gladiators in Pursuit of Challenges’ ஆவணப்படத்தில் இடம்பெறச் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் மற்றும் விஜய் இருவரும் தொடர்புடைய காட்சிகள் ஒரே ஆவணப்படத்தில் இடம்பெறவுள்ளதாக வெளியாகியுள்ள இந்த தகவல், இரு நடிகர்களின் ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், இந்த காட்சிகள் ஆவணப்படத்தின் இறுதிப் பதிப்பில் எந்தளவுக்கு இடம்பெறும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சுரேஷ் சலேவின் மனு மீதான உத்தரவு : நவம்பர் 27 மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவிப்பு

புரட்டாதி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குறைந்த வருமானம் பெறுவோருக்கு 17,000 புதிய வீடுகள்!

ஆனி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுரேஷ் சலே வழக்கு: இடைக்கால மனுக்கள் ஆகஸ்ட் 4, 6ஆம் திகதிகளில் விசாரணை!

ஆடி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புத்தளம் மற்றும் நாவற்காடு கடற்கரை பகுதிகளில் பெருந்தொகை பீடி இலைகள் கடற்படையினால் மீட்பு

புரட்டாதி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube