Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரயில் சேவைகள் வழமைக்கு? – வெளியான அறிவிப்பு

#SriLankaNews #Railway #TrainServices #TrainUpdate #RailwayUpdate #SriLankaRailways #TransportNews #BreakingNews #LatestNews #NewsUpdate

புரட்டாதி 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ரயில் திணைக்களத்தின் பொது முகாமையாளரை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் தொழிற்சங்கங்களால் ஆரம்பிக்கப்பட்ட அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் இன்றும் தொடர்வதாக இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் (SLRSMA) தெரிவித்துள்ளது.

நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்த தொழிற்சங்க நடவடிக்கை இன்று நள்ளிரவு வரை தொடரும் என அச்சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

ரயில் திணைக்களத்தில் நிலவும் குறைபாடுகள் மற்றும் திறமையின்மை குறித்து பலமுறை சுட்டிக்காட்டியும் உரிய பதில் கிடைக்காத நிலையிலேயே இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

பொது முகாமையாளரை நீக்குவது உள்ளிட்ட தங்கள் கோரிக்கைகள் குறித்து அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் வலியுறுத்தியது.

இருப்பினும், தொழிற்சங்க வேலைநிறுத்தம் தொடர்ந்தாலும், இன்று ரயில் சேவைகளை வழமை போன்று முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து அத்தியட்சகர் அசங்க சமரசிங்க தெரிவித்தார்.

அதற்கமைய, இன்று காலை மற்றும் மாலை வேளைகளில் அனைத்து அலுவலகப் ரயில்களும் (office trains) இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், இன்று பார்சல் ரயில்கள், காங்கேசன்துறை – கொழும்பு இடையிலான நகரங்களுக்கிடையிலான (Intercity) ரயில், யாழ் தேவி ரயில் மற்றும் மன்னாரிலிருந்து கொழும்புக்குச் செல்லும் ரயில் ஆகியவற்றை இயக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

காங்கேசன்துறையிலிருந்து கொழும்புக்குச் செல்லும் இரவு நேர அஞ்சல் ரயிலும் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளதாக ரயில் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

காணிகளை விடுவிக்க கோரிய மனு பிரதமர் ஹரிணியிடம் கையளிப்பு

ஆவணி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

விசாரணைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

ஆனி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உயிர்மருத்துவ பொறியியல் சேவை மத்திய நிலையம் இன்று திறந்துவைக்கப்படவுள்ளது!

ஆனி 16, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

நேருக்கு நேர் மோத இருந்த விமானங்கள் – நூலிழையில் தப்பிய பல உயிர்கள்!

ஆவணி 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube