Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுரேஷ் சலேவின் மனு மீதான உத்தரவு : நவம்பர் 27 மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவிப்பு

புரட்டாதி 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்புக்காவலில் வைத்துள்ளமையை சவாலுக்குட்படுத்தி, அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவினால் தாக்கல் செய்யப்பட்ட எழுத்தானை மனு மீதான உத்தரவு, எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது.

குறித்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் ரொஹாந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் நேற்று (18) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன விடயங்களை முன்வைக்கையில்,“ அரசியலமைப்பின் 140 ஆவது பிரிவின் கீழ் நீதிமன்றத்தின் எந்தவொரு வழக்கு விசாரணையையும் மேற்கொள்வதற்கும், அது தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குமான அதிகாரங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு தீர்ப்பளிக்கும் அதிகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு உள்ளது” என்றார்.

இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி, மனுதாரரான சுரேஷ் சலேவின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததுடன், அதற்கு சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி சுஹர்ஷி ஹேரத் தனது எதிர்ப்பைப் பதிவுசெய்தார். எவ்வாறாயினும், குறித்த மனு தொடர்பான எழுத்துமூல சமர்ப்பணங்களை இந்த மாதம் 20 ஆம் திகதி தாக்கல் செய்யுமாறு நீதியரசர்கள் குழாம் இரு தரப்பினருக்கும் உத்தரவு பிறப்பித்திருந்தது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

புதிய அரசியலமைப்பு கட்டாயம் உருவாக்கப்படும் – ஹர்ஷன நாணயக்கார

புரட்டாதி 20, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

கட்டார் அமீருக்கு பிரதமர் ஹரிணி இரங்கல்!

ஆடி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

2027 ஆம் ஆண்டுக்கான பரீட்சை அட்டவணை

ஆவணி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொலித்தீன் பயன்பாடு குறைக்கப்பட்டுள்ளது – நுகர்வோர் விவகார அதிகாரசபை

ஆவணி 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube