Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சபரகமுவ மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனம்:

ஆனி 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்
இரத்தினபுரி: சபரகமுவ மாகாணத்தில் இந்த ஆண்டில் இதுவரை 4,660 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், ஐந்து மரணங்கள் பதிவாகியுள்ளதாக சபரகமுவ மாகாண பிரதம செயலாளர் ஜே. எம். யூ. கே. ஜயசேகர தெரிவித்துள்ளார்.

சபரகமுவ மாகாண டெங்கு ஒழிப்புக்குழுக் கூட்டம் இன்று (26) இரத்தினபுரியில் உள்ள மாகாண சபை கேட்போர் கூடத்தில், மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திலேயே இந்தத் தரவுகள் வெளியிடப்பட்டன.

மாகாணத்தில் டெங்கு நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், எதிர்வரும் ஜூலை மாதம் 01 ஆம் திகதி முதல் 07 ஆம் திகதி வரை ‘டெங்கு ஒழிப்பு வாரமாக’ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் அரச மற்றும் தனியார் துறையினர் அனைவரும் ஒன்றிணைந்து முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டுமென மாகாண பிரதம செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நிகழ்வில் கருத்துத் தெரிவித்த சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, “டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் வெறும் ஒரு வாரத்துடன் நின்றுவிடக் கூடாது. வருடம் முழுவதும் இந்தச் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்கு உள்ளூராட்சி மன்றங்கள், பிரதேச செயலகங்கள், சுகாதாரப் பிரிவினர் மற்றும் காவல்துறை உள்ளிட்ட அனைத்து அரச மற்றும் தனியார் தரப்பினரும் ஒருங்கிணைந்து செயற்படுவது அவசியமாகும்” என்று வலியுறுத்தினார்.
செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் பெண் ஒருவர் கம்பஹாவில் கைது!

ஆடி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கட்டாரில் இலங்கையர்கள் மூவர் உயிரிழப்பு

ஆடி 19, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

கிரேட் நிகோபார் திட்டம் தொடர்பில் ராகுல் காந்தி கடும் விசனம்!

வைகாசி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பரீட்சைத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

ஆனி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube