2027 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடருக்கான மினி ஏலம், (Mini Auction) எதிர்வரும் வரும் டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் நடைபெறவுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாக வெளிநாடுகளில் நடத்தப்பட்டு வந்த ஐபிஎல் ஏலம், மீண்டும் இந்தியாவிலேயே நடத்தப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துபாய், ஜெத்தா மற்றும் அபுதாபி ஆகிய வெளிநாடுகளில் கடந்த பருவங்களின் ஏலங்கள் நடத்தப்பட்ட நிலையில், அணி உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் இந்தியாவிலேயே ஏலத்தை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) முடிவு செய்துள்ளது.
டிசம்பர் மாதம் விருந்தக வசதிகள் மற்றும் தங்குமிட ஏற்பாடுகளை ஆய்வு செய்த பிறகே ஏலம் நடைபெறும் நகரம் இறுதி செய்யப்படும்.
போட்டிகளில் ‘இம்பேக்ட் பிளேயர்’ (Impact Player) விதியைத் தொடர்வதா அல்லது நீக்குவதா என்பது குறித்த இறுதி முடிவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இன்னும் அறிவிக்கவில்லை.
இது குறித்து விரைவில் நடைபெறும் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
