Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இனி எந்தவொரு இசை நிகழ்வுக்கும் அனுமதிப்பத்திரம் கட்டாயம்!

புரட்டாதி 21, 2026
படிக்க 2 நிமிடங்கள்

 

இலங்கையில் இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் வெளியீட்டாளர்களின் புலமைச் சொத்துரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில், திருமணம், களியாட்டங்கள், நிறுவன நிகழ்வுகள், DJ நிகழ்ச்சிகள், அத்துடன் வங்கிகள் மற்றும் வர்த்தக மையங்களில் இசை ஒலிபரப்ப அனுமதிப்பத்திரம் பெறுவதைக் கட்டாயமாக்கி புதிய ஒழுங்குவிதிகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.

தேசிய புலமைச் சொத்து அலுவலகத்தின் கீழ் இயங்கும் இலங்கை படைப்பாளிகள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கத்தினால் கொண்டுவரப்பட்ட இந்த விதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ளன.

நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ரூ. 20,000 முதல் ரூ. 125,000 வரை அனுமதிப்பத்திரக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 100 பேருக்குக் குறைவான DJ நிகழ்ச்சிகளுக்கு ரூ. 20,000 கட்டணமும், 100 முதல் 300 பேர் வரையிலான நிகழ்வுகளுக்கு ரூ. 30,000 கட்டணமும், 300 பேருக்கு மேற்பட்ட நிகழ்வுகளுக்கு ரூ. 40,000 கட்டணமும் அறவிடப்படும்.

நேரடி இசை நிகழ்ச்சிகளுக்கு இந்த மூன்று பிரிவுகளின் கீழ் முறையே ரூ. 25,000, ரூ. 35,000 மற்றும் ரூ. 50,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தனியார் அல்லது நிறுவனங்களின் DJ நிகழ்வுகளுக்கு ரூ. 25,000, ரூ. 40,000 மற்றும் ரூ. 50,000 அறவிடப்படும் அதேவேளை, நிறுவனங்களின் நேரடி இசை நிகழ்வுகளுக்கு முறையே ரூ. 50,000, ரூ. 75,000 மற்றும் ரூ. 125,000 கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.

ஆரம்பகட்டமாக குறித்த சங்கத்தினால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் இலங்கை இசைப் படைப்புகளுக்கும், இந்திய செயல்திறன் உரிமைகள் சங்கம் மூலமாகப் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் தமிழ் மற்றும் ஹிந்திப் பாடல்களுக்கும் மட்டுமே இந்த அனுமதிப்பத்திரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலம் அல்லது ஏனைய வெளிநாட்டு இசைக்கு இது பொருந்தாது.

திருமணங்கள், விருது வழங்கும் விழாக்கள், தயாரிப்பு அறிமுக விழாக்கள், DJ நிகழ்ச்சிகள், வர்த்தக மையங்கள், வங்கிகள், திரையரங்குகள் மற்றும் பேருந்துகள், தொடருந்துகள் போன்ற பொதுப்போக்குவரத்து வாகனங்களுக்கும் ஆண்டு அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளது.

அனுமதிப்பத்திரம் இல்லாத நிகழ்வுகளுக்கு விடுதிகள் அனுமதி வழங்கக் கூடாது என்பதுடன், நிகழ்ச்சிக்குப் பிறகு ஒலிபரப்பப்பட்ட பாடல்களை அடையாளம் காண அதன் ஒலிப்பதிவை அமைப்பாளர்கள் வழங்க வேண்டும்.

பாடகர்களை விடவும் பாடல்களை உருவாக்கும் இசையமைப்பாளர்கள் மற்றும் பாடலாசிரியர்களுக்கு காப்புரிமை தொகை சென்று சேர்வதை உறுதிசெய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை படைப்பாளிகள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் நிலார் என். காசிம் தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தேர்தலில் ‘அழியாத மை’ நடைமுறையை நீக்குவதன் மூலம் 100 மில்லியன் சேமிப்பு!

ஆனி 24, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

நயகரா ஆற்றின் அழிவை தடுக்க புதிய முயற்சி

புரட்டாதி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வு

ஆடி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

இன்று நாட்டின் பல இடங்களுக்கு 100 mm மழைவீழ்ச்சி பதிவாகும்!

ஆனி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube