Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடற்றொழில் அமைச்சர் பங்கேற்ற நிகழ்வில் ஏற்பட்ட மோதல்

#கடற்றொழில்_அமைச்சர் #மோதல் #பொலிஸார் #துப்பாக்கிச்சூடு #கடற்றொழில் #அமைச்சர்_நிகழ்வு #பொலிஸார்_துப்பாக்கிச்சூடு #இலங்கை_செய்திகள் #TamilNews #SriLankaNews #BreakingNews #ClashNews #PoliceShooting

அக்டோபர் 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கிளிநொச்சி – பூநகரி, கிராஞ்சி செந்தாரகை விளையாட்டுக்கழக மைதானத்தில் கடந்த 27.09.2026 அன்று நடைபெற்ற உதைபந்தாட்ட இறுதிப் போட்டியின் போது இரு அணிகளின் ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைக் கட்டுப்படுத்த பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த இறுதிப் போட்டியில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருந்தார்.

குறித்த போட்டியின்போது இரு அணிகளின் ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட குழப்பநிலை பின்னர் கட்டுக்கடங்காத அளவுக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து சம்பவ இடத்தில் இருந்த பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி இரு தரப்பினரையும் கலைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், மோதல் தீவிரமடைந்த நேரத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் சம்பவ இடத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேறியதாக போட்டியை பார்வையிட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு மாகாண மட்டத்திலான குறித்த தொடரை உரிய அங்கீகாரம் இல்லாத குழுவிடம் ஒப்படைத்ததன் விளைவாகவே இவ்வாறான குழப்பநிலை ஏற்படுவதற்கு காரணம் என விளையாட்டு ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

போட்டி ஏற்பாடு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நிர்வாக நடைமுறைகள் தொடர்பிலும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கம்பஹா மாவட்டத்தில் இன்று 19 மணித்தியால நீர்வெட்டு!

ஜூன் 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுகீஸ்வர பண்டாரவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

ஜூன் 18, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

இந்திய மகளிர் அணி அபார வெற்றி!

அக்டோபர் 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பில் 624 வீடுகள் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு!

ஜூன் 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube