Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் வெளிநாட்டவர் கைது

புரட்டாதி 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சீனாவில் தயாரிக்கப்பட்ட சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுகளை நாட்டுக்குள் கடத்தி வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்ட சீன நாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

38 வயதுடைய சீன நாட்டுத் தொழில்நுட்ப வல்லுநரான சந்தேகநபர், சீனாவில் கொள்வனவு செய்த புகையிலைப் பொருட்களுடன் மலேசியாவின் கோலாலம்பூர் ஊடாக எயார் ஏஷியா விமான சேவைக்கு சொந்தமான AK-047 விமானத்தில் நேற்று (21) இரவு 10.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அவரது பயணப் பொதிகளை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் சோதனையிட்டபோது, மறைத்து வைக்கப்பட்டிருந்த 20,000 சிகரெட்டுகள் அடங்கிய 100 சிகரெட் பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கைப்பற்றப்பட்ட சட்டவிரோத புகையிலைப் பொருட்களுடன் மேலதிக விசாரணைகளுக்காக இன்று (22) நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

AI காதலன் AI குழந்தையுடன் வாழும் பெண்

ஆவணி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீத இன்று தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

வைகாசி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வசிப்பதற்கு காணி இன்றி நிர்க்கதியாக நிற்கும் குடும்பங்கள்

ஆடி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

ஆனி 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube