Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை அடுத்த சில நாட்களுக்கு தொடரும்

புரட்டாதி 23, 2026
படிக்க 2 நிமிடங்கள்

 

நாட்டில் தற்போது நிலவும் மழை மற்றும் சீரற்ற காலநிலை அடுத்த சில நாட்களுக்கு தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

வடகிழக்கே வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து தீவிர தாழமுக்கமாக மாறக்கூடும். இதனால் இலங்கைக்கு நேரடித் தாக்கம் எதுவும் இல்லை என்ற போதிலும், அப்பகுதியை நோக்கி வீசும் காற்று காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் காணப்படும் மழை நிலைமை மேலும் தீவிரமடைந்து தொடரும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். வடமத்திய மாகாணத்திலும் மன்னார் மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40–50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுப்படுகிறார்கள்.

திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாக சிலாபம் வரையான கரையோரத்துக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும், காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்துக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் மணித்தியாலத்துக்கு 50–60 கிலோ மீற்றர் வரையான பலத்த காற்று வீசக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை மற்றும் மன்னார் ஊடாக சிலாபம் வரையான கடற்பரப்புகளும், காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படுவதுடன், அக்கடற்பரப்புகளில் மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை காற்றும் வீசக்கூடும். மேலும், புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையிலான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 – 2.5 மீற்றர் வரை உயரக்கூடும். எனவே, வங்களா விரிகுடா கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மிகவும் அவதானத்துடன் இருப்பதுடன், இது தொடர்பில் வெளியிடப்படும் அறிவுத்தல்கள் குறித்து அவதானமாக செயற்பட வேண்டும்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கடற்பரப்புகளுக்கான எச்சரிக்கை!

ஆவணி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கண்டி – மஹியங்கனை வீதியில் விபத்து – ஒருவர் பலி!

வைகாசி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வேகமாக பரவிவரும் மெனிஞ்சைடிஸ் மூளைக்காய்ச்சல்!

வைகாசி 23, 2026
இலங்கை

பாதாள உலகக் குற்றவாளிகள் இலங்கைக்கே நாடுகடத்தப்பட்டு கைது!

ஆனி 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube