Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பல்கலை மாணவி உயிரிழப்பு

#பல்கலைமாணவி #மாணவிஉயிரிழப்பு #பல்கலைக்கழகம் #மாணவிமரணம் #பல்கலைமாணவர்செய்தி #UniversityStudent #StudentDeath #UniversityNews

செப்டம்பர் 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியின் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாட்டுப்பள்ளை பகுதியில் நேற்று (22) மாலை இடம்பெற்ற விபத்தில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டில் கல்வி பயின்ற 26 வயதுடைய திருமணமான மாணவி உயிரிழந்துள்ளார்.

நிந்தவூர் 9ஆம் பிரிவு மையவாடி வீதியைச் சேர்ந்த பக்கீர் முகைதீர் பிஸ்மி பாத்திமா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பல்கலைக்கழகத்திற்குச் சென்று, இறுதியாண்டுக்கான பாடச் சமர்ப்பிப்பை நிறைவு செய்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளின் பின்புற ஆசனத்தில் அமர்ந்திருந்த மாணவியின் ஆடை எதிர்பாராதவிதமாக பின்சக்கரத்தில் சிக்கியதால், மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மாணவி உடனடியாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவருக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதுடன், அவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் நூர்டீன் சர்ஜூனின் உத்தரவின் பேரில் திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீத் அல் ஜவாஹிர் சம்பவ இடத்திற்குச் சென்று மரண விசாரணைகளை மேற்கொண்டார்.

பிரேத பரிசோதனையின் பின்னர், தலையில் ஏற்பட்ட பாரிய காயத்தினால் ஏற்பட்ட தீவிர இரத்தப்போக்கே மரணத்திற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணியில் இதுவரை 444 என்புகூடுகள் முழுமையாக அகழ்வு

ஜூலை 22, 2026
இலங்கை

முறிகண்டியில் புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு

மே 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜா-எல வயல்வெளியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

அக்டோபர் 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிங்கப்பூரில் குழைந்தைகள் வளர்ப்பிற்கு 55140 அமெரிக்க டொலர் நிதியுதவி

ஆகஸ்ட் 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube