சிறையில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினரும், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷ, வழக்கு விசாரணைக்காக சற்றுமுன்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு எயார் பஸ் விமானங்களை கொள்வனவு செய்தபோது இடம்பெற்ற சர்ச்சைக்குரிய, கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நாமல் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
