Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வங்காள விரிகுடாவில் பலத்த காற்று:

#வங்காளவிரிகுடா #ஆழ்கடல் #கடல்நிலை #பலத்தகாற்று #சிவப்புஎச்சரிக்கை #மீனவர்கள் #ஆழ்கடல்மீன்பிடி #கடற்படை #கடல்பாதுகாப்பு #வானிலைஎச்சரிக்கை #கடற்காற்று #மீன்பிடிப்படகுகள் #BayOfBengal #RedAlert #Fishermen #RoughSea #WeatherAlert

செப்டம்பர் 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை காரணமாக, ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் மற்றும் கடற்படையினருக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு ஆந்திரக் கடற்கரைக்கு மேலிருந்த தீவிர தாழமுக்கம் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, இந்தியாவின் கலிங்கப்பட்டினத்திற்கு தென்மேற்கே கரையைக் கடந்துள்ளது.

இன்று (24) காலை 5.30 மணி நிலவரப்படி, குறித்த தாழமுக்கத் தொகுதி காங்கேசன்துறைக்கு சுமார் 1,100 கிலோமீற்றர் வடகிழக்கே நிலைகொண்டிருந்ததாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக குறித்த கடற்பரப்புகளில் பலத்த இடியுடன் கூடிய மழையும், மிகவும் கொந்தளிப்பான கடல் நிலையும் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரை குறிப்பிடப்பட்ட கடற்பரப்புகளுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்கள் மற்றும் கடற்படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அப்பகுதிகளில் உள்ள படகுகள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, தாழமுக்கம் இந்தியக் கரையைக் கடந்துள்ள போதிலும், அதன் தாக்கத்தால் தென்மேற்குப் பருவக்காற்று வலுவடையக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மேற்கு, சபரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

முக்கியச் செய்திகள்

100 டொலரைக் கடந்தது கச்சா எண்ணெய் விலை!

செப்டம்பர் 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிங்களவர்களின் வரிப்பணத்தில் செம்மணி அகழ்வு – விமல் வீரவன்ச

ஆகஸ்ட் 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கம்பஹாவில் போதைப்பொருளுடன் இராணுவச்சிப்பாய் கைது

செப்டம்பர் 12, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

குளவிக்கொட்டால் ஒருவர் பலி; இருவர் காயம்!

ஜூன் 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube