போலியான பிம்பத்தை உருவாக்குவதற்குப் பதிலாக, தான் உண்மையில் எப்படிப்பட்டவரோ அப்படியே தன்னை வெளிப்படுத்துவதன் மூலம் மக்களின் நம்பிக்கையைப் பெற விரும்புவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நீடித்த மக்கள் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு உண்மையான நேர்மை அவசியம் என தனது சமூக ஊடகப் பதிவில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தன்னைப் பற்றிய போலியான பிம்பத்தை உருவாக்கினால், தனது உண்மையான சுபாவம் வெளிப்படும்போது மக்கள் தன் மீது வைத்துள்ள நம்பிக்கை குறையக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசாங்கத்தின் பதவிக்காலம் நிறைவடையும்போது, ஆட்சிக்கு வந்தபோது தங்களுக்கு வாக்களித்தவர்களைவிட அதிகமான மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பார்கள் என தான் நம்புவதாகவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
