பொரளை – சஹஸ்புர பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொம்பனித்தெரு பகுதியிலிருந்து பிரவேசித்த முச்சக்கர வண்டியை நிறுத்துமாறு பொரளை போக்குவரத்து பொலிஸார் கட்டளையிட்டுள்ளனர்.
இந்த கட்டளையை மீறி குறித்த முச்சக்கர வண்டி முன்னோக்கிப் பயணித்ததனால் பொலிஸாரினால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதுடன், அதில் பயணித்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களிடமிருந்து கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபடச் சென்றிருக்கக்கூடும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
