Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிக விலைக்கு தண்ணீர் போத்தலை விற்பனை செய்த சுற்றுலா உணவகத்துக்கு 5 இலட்சம் ரூபா அபராதம்

புரட்டாதி 24, 2026
படிக்க 2 நிமிடங்கள்

 

அதிகபட்ச சில்லறை விலையாக 100 ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டிருந்த தண்ணீர் போத்தலை 300 ரூபாவிற்கு அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் தம்புள்ளையிலுள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றிற்கு ரூபா 500,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.

தம்புள்ளை, விஹார சந்தியில் உள்ள இரத்மல்கஹ எல வீதியில் அமைந்துள்ள குறித்த சுற்றுலா ஹோட்டலில் மாத்தளை மாவட்ட நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி நடத்திய திடீர் சோதனையின் போதே இந்தக் குற்றம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று (23) புதன்கிழமை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குறித்த சுற்றுலா ஹோட்டல் நிறுவனம் தங்களது குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது. இதனை அடுத்து தம்புள்ளை நீதவான் நீதிமன்றம் நிறுவனத்திற்கு 5 இலட்சம் ரூபாயை தண்டப்பணமாக விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

இவ்வழக்கில் குறிப்பிடப்பட்ட 100 ரூபாய் என்பது அப்போதைய விலையாகும் எனக் சுட்டிக்காட்டியுள்ள நுகர்வோர் விவகார அதிகாரசபை, கடந்த ஜூன் மாதம் 10 ஆம் திகதியிடப்பட்ட 2492/29 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் படி தற்போதைய புதிய அதிகபட்ச சில்லறை விலைகளை நினைவூட்டியுள்ளது.

500 மில்லிலீற்றர் – 999 மில்லிலீற்றர் கொள்ளளவு கொண்ட போத்தல்களுக்கு 80 ரூபாவாகவும், 1 லீற்றர் – 1.499 லீற்றர் கொள்ளளவு கொண்ட போத்தல்களுக்கு 120 ரூபாவாகவும், 1.5 லீற்றர் – 1.999 லீற்றர் கொள்ளளவு கொண்ட போத்தல்களுக்கு 150 ரூபாவாகவும் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2 லீற்றர் – 2.499 லீற்றர் கொள்ளளவு கொண்ட போத்தல்களுக்கு 180 ரூபாவாகவும், 5 லீற்றர் – 6.999 லீற்றர் கொள்ளளவு கொண்ட போத்தல்களுக்கு 400 ரூபாவாகவும் தற்போதைய அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹோட்டல்கள், உணவகங்கள், ஓய்வு விடுதிகள் மற்றும் கடைகளில் குடிநீர் போத்தல்களை வாங்கும் போது குறித்த அதிகபட்ச சில்லறை விலையைச் சரிபார்த்து, அதற்கான பற்றுச்சீட்டை கட்டாயம் பெற்றுக்கொள்ளுமாறு நுகர்வோர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வர்த்தகர்கள் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்குப் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது எனவும், சந்தையில் நிகழும் இதுபோன்ற முறைகேடுகள் குறித்து நுகர்வோர் விவகார அதிகாரசபையின் ‘1977’ என்ற உடனடி அழைப்பு இலக்கத்திற்குத் தொடர்புகொண்டு முறைப்பாடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

இணைய மோசடி – பெண் கைது!

ஆனி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சர்வதேச நாணய நிதியத் தூதுக்குழு அடுத்த வாரம்

புரட்டாதி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

‘நீதிக்கான நீள்பயணம்’ சர்வதேச மாநாடு

ஆவணி 30, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

தங்க விலை வீழ்ச்சி!

வைகாசி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube