முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, இன்று (24) பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகவில்லை.
சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதால், மாற்றுத் திகதி வழங்குமாறு அவரது தரப்பில் எழுத்துமூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
‘சிரிலிய சவிய’ நிதிக் கணக்கு தொடர்பான நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் முறைகேடுகள் குறித்த விசாரணைக்காக அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
