Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இந்தியா மற்றும் இலங்கை போதைப்பொருள் தடுப்பு முகமைகளுக்கு இடையிலான 5-வது தலைமை இயக்குநர் அளவிலான பேச்சுவார்த்தை கொழும்பில் —

புரட்டாதி 25, 2026
படிக்க 2 நிமிடங்கள்

 

(கனகராஜா சரவணன்)

இந்தியா மற்றும் இலங்கை போதைப்பொருள் தடுப்பு முகமைகளுக்கு இடையிலான 5-வது தலைமை இயக்குநர் அளவிலான பேச்சுவார்த்தை, கடந்த 23 புதன்கிழமை கொழும்பில் இந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் ; (NCB) துணைத் தலைமை இயக்குநர் ஆர். சுதாகர் தலைமையிலான குழுவுக்கும் இலங்கை காவல்துறையின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் (PNB) உதவி பொலிஸ் மா அதிபர் (டி.ஜ.ஜீ) கே.டி.ஜி.எல். அசோக தர்மசேன தலைமையிலான குழுவுக்கு இடையே இடம்பெற்றது

2025-ல் ஏப்பிரல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின் போது, இருதரப்புப் பாதுகாப்பு ஒத்துழைப்பு, குறிப்பாக சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பது குறித்து அளிக்கப்பட்ட புதிய முக்கியத்துவத்தின் அடிப்படையிலும்.

2026 செப்டம்பர் 9 திகதி கொழும்பில் இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசநாயக்காவை சந்தித்தபோது ஜனாதிபதி இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதில் இந்தியாவின் முழுமையான ஆதரவை கோரியிருந்தார்.

இதற்கமைய 5-வது தலைமை இயக்குநர் அளவிலான பேச்சுவார்த்தையில் இந்தியக் குழுவிற்கு போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் (NCB) துணைத் தலைமை இயக்குநர் ஆர். சுதாகர் தலைமை தாங்கினார்; இலங்கைத் தரப்புக் குழுவிற்கு இலங்கை காவல்துறையின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் (PNB) உதவி பொலிஸ் மா அதிபர் (டி.ஜ.ஜீ) கே.டி.ஜி.எல். அசோக தர்மசேன தலைமை தாங்கினார்.

இந்தியக் குழுவில் (NCB) அதிகாரிகளைத் தவிர, தமிழ்நாடு காவல்துறை, இந்தியக் கடலோரக் காவல் படை மற்றும் வெளியுறவு அமைச்சகம் (MEA) ஆகியவற்றின் அதிகாரிகளும் இடம்பெற்றிருந்தனர். அதேவேளையில், இலங்கைத் தரப்புக் குழுவில் (PNB) அதிகாரிகளுடன், அட்டர்னி ஜெனரல் துறை, இலங்கை சுங்கம், இலங்கை கடலோரக் காவல் படை, அரசு ஆய்வாளர் துறை, சிறப்பு அதிரடிப்படை, இலங்கை கடற்படை, NDDCB நிதிசார் புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

இதன் போது இரு தரப்பினரும் போதைப்பொருள் கடத்தலில், குறிப்பாக கடல் வழித்தடங்கள் மூலமான கடத்தலில் காணப்படும் புதிய போக்குகள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளைக் கண்டறிதல், புலனாய்வு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான விசாரணையில் செயல்பாட்டு முயற்சிகளை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள், கடத்தல் வழித்தடங்கள் மற்றும் கடத்தல் முறைகள் குறித்த செயல்முறைக்கு உகந்த புலனாய்வுத் தகவல்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டதுடன் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலால் ஏற்படும் வளர்ந்து வரும் சவால்களைத் திறம்பட எதிர்கொள்ள, இரு நாடுகளின் போதைப்பொருள் தடுப்புச் சட்ட அமலாக்க முகமைகளுக்கு இடையிலான நிறுவன ரீதியான ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

இடியுடன் கூடிய மழை பெய்யும்

ஆவணி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

1,000க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் பணி நீக்கம்!

ஆடி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தொழில் முயற்சியாளர்கள் “இங்குபேசன்” நிலையத்தினை உபயோகிக்க வேண்டும் – சுனில் ஹந்துன்நெத்தி

ஆனி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழ்.மாநகர சபைக்கு புதிய கணக்காளர்

வைகாசி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube